மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூபாய் 6கோடி செலவில் புதுப்பிக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2174

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் 6கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது. காவல்துறை அணிவகுப்புடன் கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், பெருமை வாய்ந்த கோட்டையில் தேசியக் கொடி ஏற்ற வாய்ப்பு தந்த தமிழக மக்களுக்கு நன்றி என்றார். தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments