காதலை ஏற்க மறுத்த பெண், கத்தியால் குத்திக் கொன்ற இளைஞன்... பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்

0 5958

ஆந்திர மாநிலம் குண்டூரில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை பட்டப்பகலில் இளைஞன் ஒருவன் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ரம்யா என்ற அந்த பி.டெக் மாணவி, காலையில் தனது வீட்டருகேயுள்ள உணவகத்துக்கு உணவு வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் அந்த மாணவியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளான். ஒரு கட்டத்தில் மாணவியை பைக்கில் ஏறி தன்னுடன் வருமாறு அவன் கூறவே, மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை சரமாரியாகக் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடினான்.

பட்டப்பகலில் இந்த கொடூரம் அரங்கேறியபோது சுற்றி நின்றிருந்த எவருமே மாணவியைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம்.

சசி கிருஷ்ணா என்ற அந்த இளைஞனை கைது செய்துள்ள போலீசார், ரம்யாவை அவன் ஒருதலையாக காதலித்ததாகவும் அவனது காதலை ஏற்க மறுத்ததால், கொலை செய்தது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments