திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காதல் திருமணம் செய்த மகளின் கழுத்தை அறுத்த தந்தை கைது

0 13794
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காதல் திருமணம் செய்த மகளின் கழுத்தை அறுத்த தந்தை கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்டது பிடிக்காமல், அவரது கழுத்தை கத்தியால் அறுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

மடத்துப்பாளையத்தைச் சேர்ந்த பூராஜா என்பவரது மகள் பிரியங்காவும் அவிநாசியைச் சேர்ந்த முகம்மது யாசின் என்பவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர்.

முகம்மது யாசின் வீட்டில் திருமணத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், சிங்காநல்லூரில் வீடு எடுத்து தம்பதி தங்கியுள்ளனர்.

மகள் மீது ஆத்திரத்தில் இருந்த பூராஜா மதுபோதையில் முகமது யாசின் வீட்டிற்கு சென்று அங்கு தனியாக இருந்த மகள் பிரியங்காவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

காயங்களுடன் பிரியங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பூராஜாவை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments