ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் செய்யப் பேச்சு நடைபெறுவதாகத் தகவல்

0 2120
ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் செய்யப் பேச்சு நடைபெறுவதாகத் தகவல்

ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் செய்வது குறித்துப் பேச்சு நடத்தக் காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்குத் தாலிபான்களின் பிரதிநிதிகள் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதிகளைத் தாலிபான்கள் ஏற்கெனவே கைப்பற்றி விட்ட நிலையில், ஹிராத், காந்தகார், மசார் இ சரீப், ஜலாலாபாத் என அடுத்தடுத்துப் பல்வேறு நகரங்களையும் பிடித்தனர்.

அரசுப் படைகளுடன் பெரும்போர் இன்றித் தாலிபான்கள் உள்நுழைந்ததுமே நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டனர்.

காபூல் நகரம் விரைவில் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் எனப் பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில் காபூலின் நாற்புறமிருந்தும் தாலிபான்கள் நகருக்குள் நுழைந்துவிட்டதாகவும், ஆட்சி மாற்றம் குறித்து அதிபர் மாளிகையில் பேச்சு நடத்தத் தாலிபான் பிரதிநிதிகள் வந்துள்ளதாகவும் ஆப்கான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments