நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை - தலைமை நீதிபதி

0 1990
நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை - தலைமை நீதிபதி

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய அவர், சுதந்திர போராட்ட வீரர்களில் பலர் சட்டம் படித்தவர்கள் என்று கூறிய அவர், முதன் முதலில் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலுமே சட்டம் படித்தவர்கள்  நிறைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

முன்னர் நாடாளுமன்ற அவைகளில் ஆக்கபூர்வ விவாதங்கள் நடைபெற்றதாகவும், சட்டங்கள் குறித்து ஆழமாகவும், விரிவாகவும் விவாதிக்கப்பட்டதோடு அது குறித்து தெளிவு இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் தற்போது காணப்படும் நிலை துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, சட்டங்கள் குறித்து தெளிவு இல்லை என்றும், வழக்கறிஞர்களும் அறிவாளிகளும் நாடாளுமன்ற அவைகளில் இல்லாவிட்டால் இவ்வாறுதான நடக்கும் என்றும் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments