ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் 4 வது பெரிய நகரத்தையும் கைப்பற்றினர்

0 2456
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் 4 வது பெரிய நகரத்தையும் கைப்பற்றினர்

ஆப்கானிஸ்தானின் 4வது பெரிய நகரமான மஸார் இ ஷெரீப்பும் தாலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளது. அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதையடுத்து அரசுப் படைகளுக்கும், தாலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.

இதில் தாலிபான்களின் உக்கிரமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ராணுவத்தினர் பின்வாங்கி வருகின்றனர். அந்நாட்டின் 2 வது பெரிய நகரமான காந்தஹார், 3 வது பெரிய நகரமான ஹீரட் நகரத்தை ஏற்கனவே தீவிரவாதிகள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலை நெருங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் 4வது பெரிய நகரமான மஸார் இ ஷெரீப் என்ற நகரத்தையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments