டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி..! ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவி கோலாகலம்

0 4566

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சுதந்திர தின விழாவில் பங்கேற்க டெல்லி செங்கோட்டைக்கு சென்ற, பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் உள்ளிட்ட, ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments