75வது சுதந்திர தினம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 3046

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார். இதையொட்டி சென்னையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்ற இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.

சுதந்திர தின விழாவின்போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் இணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் மூவாயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாகக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா முடியும் வரை கோட்டையைச் சுற்றி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments