இந்திய வரைபடத்தை "ரூபிக்ஸ் கியூப்"களால் உருவாக்கிய சிறுமி

0 2436
இந்திய வரைபடத்தை "ரூபிக்ஸ் கியூப்"களால் உருவாக்கிய சிறுமி

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி 955 ரூபிக்ஸ் கியூப்கள் மூலம், மூவர்ணத்தால் ஆன இந்திய வரைபடத்தை உருவாக்கினார்.

மூன்றாம் வகுப்பு மாணவியான கிறிஸ்டா ஜெசிகா இரண்டாண்டுகளாக தனியார் பயிற்சி மையத்தில் ரூபிக்ஸ் கியூப் விளையாட பயிற்சி பெற்று வந்தார். தமிழ்நாடு கியூப் அசோசியேசன் சார்பில் பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமி கிறிஸ்டா ஜெசிகா ரூபிக்ஸ் கியூப்களால் ஆறரை அடி உயரம், ஐந்தரை அடி அகலத்தில் இந்திய வரைப்படத்தை 8 மணி நேரத்தில் படைத்தளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments