பாகிஸ்தான் சுதந்திர நாள் ; இந்தியப் படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கிய பாகிஸ்தான் படையினர்

0 2445
பாகிஸ்தான் சுதந்திர நாளையொட்டி இந்தியப் படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கிய பாகிஸ்தான் படையினர்

பாகிஸ்தான் சுதந்திர நாளையொட்டிப் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் எல்லையில் இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே உள்ள அட்டாரி - வாகா எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்கள், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினர். இந்திய வீரர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதேபோல் ஜம்மு காஷ்மீரில் இருநாடுகளிடையான எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினருக்கு இனிப்புகளை வழங்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments