2-வது நாள் ஆட்டத்தின் போது DRS எடுக்க முயன்ற விராட் கோலியை தடுத்து நிறுத்த முயன்ற ரிஷப் பந்த்

0 4597
2-வது நாள் ஆட்டத்தின் போது DRS எடுக்க முயன்ற விராட் கோலியை தடுத்து நிறுத்த முயன்ற ரிஷப் பந்த்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது DRS எடுக்க முயன்ற விராட் கோலியை, ரிஷப் பந்த் தடுத்து நிறுத்த முயன்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது.  

23 ஆவது ஓவரில் சிராஜ் வீசிய பந்து, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் பேட்டில் பட்டது. நடுவர் அவுட் வழங்காததால் கேப்டன் விராட் கோலியை ரிவியூ எடுக்குமாறு சிராஜ் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து கோலி ரிவியூ எடுக்க முயன்ற போது,  விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இது அவுட்டாக இருக்காது, ரிவியூ எடுக்க வேண்டாம் என கோலியை தடுத்தி நிறுத்த முயன்றார். 

கோலி அதனை கேட்காமல் சிரித்துக்கொண்டே ரிவியூ எடுத்தார். ரிஷப் பந்த் கணித்ததுபோல், அது நாட் அவுட் என்பதால் இந்தியா ஒரு ரிவியூ வாய்ப்பை இழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments