100 நாள் ஆட்சி..! வாழ்த்த மனம் இல்லாதவர்களும் வாழ்த்தும் வகையில் செயல்படுவோம் -மு.க.ஸ்டாலின் உறுதி

0 2640

திமுக அரசின் 100 நாட்கள் சாதனையை வாழ்த்த மனம் இல்லாதவர்களும்  வாழ்த்த கூடிய வகையில், அடுத்த நூறு நாட்கள் இருமடங்கு பணியாற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், கொரோணா உச்சத்தில் இருந்த நிலையிலும் தீவிரமாக செயல்பட்டு லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதை, அரசின் 100 நாள் சாதனைகளில் முதன்மையானதாக கருதுவதாக தெரிவித்தார். எனது அரசு என்று அமைந்த இந்த அரசு நமது அரசு என்ற அடிப்படையில் தொடர்ந்து செயல்படும் என அவர் கூறினார்.

இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை வரியில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்திருப்பதாகவும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் படிப்படியாக அறிவிக்கப்படும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் வெற்றித் திருமகனாக அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகள் சார்பில் நூறு நாள் சீரிய ஆட்சி என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments