வேளாண் பட்ஜெட் தாக்கல் ; திருச்சி - நாகப்பட்டினம் பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிப்பு

0 1790
திருச்சி - நாகப்பட்டினம் பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிப்பு

படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல "ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருச்சி - நாகப்பட்டினம் பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடி பரப்பு 60 சதவீதம் என்பதை 75 சதவீதமாக உயர்த்துதல், இருபோக சாகுபடி நிலங்களை, அடுத்த 10 ஆண்டுக்குள் இரு மடங்காக அதாவது 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துதல், மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல், ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம், பனை மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறுவடைக்கு பிந்தையை இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கும் திட்டம், சிறுதானிய இயக்கம்,  சீர்மிகு தென்னை சாகுபடி, அண்ணா பண்ணை மேம்பாடு, கூட்டுப் பண்ணையத் திட்டம், அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பலன் தரும் பழப்பயிர்கள் திட்டம், சிக்கன நீர்ப் பாசனத் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதல், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி - நாகப்பட்டினம் பகுதியி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments