திண்டுகல்லில் நள்ளிரவில் லாக்கை உடைத்து பைக் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

0 4883
திண்டுகல்லில் நள்ளிரவில் லாக்கை உடைத்து பைக் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு பின்புறம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து மர்மநபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர், வழக்கம் போல் காய்கறி சந்தைக்கு பின்புறமுள்ள அலுவலகத்தின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு, ஒட்டன் சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அங்கு நிறுத்தி வைத்திருந்த பைக்கின் பூட்டை உடைத்து திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments