லஞ்ச ஒழிப்புத் துறை தொடுத்த வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் -எஸ்.பி.வேலுமணி

0 2410

மிழக லஞ்ச ஒழிப்புத் துறை தன் மீது தொடுத்துள்ள வழக்குகளைச் சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் சென்னையிலும், கோவையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இரு நாட்களாகச் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையில் இருந்த வேலுமணி, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்த பிறகு இன்று முதன்முறையாகச் சொந்த ஊரான கோவைக்கு வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments