கூட்டுறவு பயிர்க்கடன், 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

0 12954

கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களையும், 5 பவுன் வரை அடமானம் வைத்துப் பெற்ற கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை அடமானம் வைத்துப் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுவதால் பலரால் கடன் தள்ளுபடிச் சலுகை பெற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்த நிலையில், அவற்றில் ஒன்றிரண்டை நிறைவேற்றுவதாகக் கூறி அதிலும் புதிய புதிய நிபந்தனைகளை விதித்துப் பயனாளிகளின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments