நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கிய கணவன் ; வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி

0 4425
வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவன் மதுபோதையில் தாக்கியதால், மனமுடைந்த பெண், தாய் மற்றும் சகோதர, சகோதரிகளின் புகைப்படங்களுடன் வாட்ஸ் ஆப்பில் மிஸ் யூ என ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இடுவாய்பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன் தினம் இரவும், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்த குமார் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி துளசிமணியை தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த துளசிமணி சாணிபவுடரை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments