தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2165
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழையும், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 15, 16 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 17ஆம் நாள் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும், ஆகஸ்டு 18ஆம் நாள் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments