ஆக.14: நாட்டு பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிப்பு - பிரதமர் மோடி

0 3167

சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி, பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நாட்டு பிரிவினையால் ஏற்பட்ட வேதனையை ஒருபோதும் மறக்க இயலாது  என்று மோடி குறிப்பிட்டுள்ளார். பிரிவினையின் போது லட்சக்கணக்கான  மக்கள் நாடு விட்டு நாடு சென்று , கட்டுக்கடங்கா வெறுப்பு மற்றும் வன்முறையால் அவர்களில் பலர் மரணத்தை தழுவியதாக மோடி தெரிவித்துள்ளார்.

பிரிவினையின் போது மக்கள் எதிர்கொண்ட போராட்டம் மற்றும் தியாகத்தை நினைவு கூர்ந்து, ஆகஸ்ட் 14-ஐ பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக பிரிவினையை களைந்து ஒற்றுமையாக இருக்கவும், சமூக ஒற்றுமை மற்றும் மனித ஆற்றலை அதிகரிக்கவும் இந்த தினம் நினைவு படுத்துவதாக இருக்கட்டும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments