டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் அணி

0 2824

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிரான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் அணி வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

டாஸ் வென்ற சேப்பாக் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹரி நிஷாந்த் 56 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 106 ரன்கள் குவித்தது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் அணி, திருச்சி வாரியர்சை எதிர்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments