சாமியார் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

0 1713

சாமியார் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கில் சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்கக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் 30 முன்னாள் மாணவிகளை  சாட்சியங்களாக சேர்த்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று அதற்கான ஆவணங்களையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர். சிவசங்கர் பாபா, அவரது பெண் பக்தைகள் பாரதி, தீபா மற்றும் சுஷ்மிதா ஆகிய நான்கு பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் இருந்த மாணவிகளை மூளைச்சலவை செய்து சாமியார் சிவசங்கர் பாபாவின் பாலியல் இச்சைக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் மீது சந்தேகமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது எனவும், அதற்கான ஆதாரங்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கிறது எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் 59 நாட்களில் மிக விரைவாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments