போதைப் பொருள் வைத்திருந்த இளைஞனைப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளை தாக்கிய கும்பல்..

0 1857
மும்பையில் போதைப் பொருள் வைத்திருந்த நைஜீரிய இளைஞனைப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளை வெளிநாட்டுக் கும்பல் ஒன்று தாக்கி காயப்படுத்தியுள்ளது.

மும்பையில் போதைப் பொருள் வைத்திருந்த நைஜீரிய இளைஞனைப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளை வெளிநாட்டுக் கும்பல் ஒன்று தாக்கி காயப்படுத்தியுள்ளது.

மன்குர்த் என்ற இடத்தில் சிலர் போதைப் பொருள் விற்பதாக வந்த தகவலையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அங்கு சென்றனர். அப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த நைஜீரிய இளைஞனைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அப்போது அவனுடன் இருந்த சில வெளிநாட்டு இளைஞர்கள் அதிகாரிகளை கற்களாலும் கட்டைகளாலும் தாக்கினர். இதில் ஸ்ரீகாந்த் ராவத் என்ற அதிகாரி படுகாயமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments