2-வது டெஸ்ட் கிரிக்கெட் - முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் குவிப்பு

0 2348

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் சேர்த்தது.

முதல் நாள் ஸ்கோருடன் களமிறங்கிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மேற்கொண்டு 2 ரன்கள் சேர்த்து 129 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 37 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 126 புள்ளி 1 ஓவர்களில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments