கஞ்சா போதையில் பேருந்து நிலையத்தில் இளைஞர் ரகளை… துணிச்சலாக மடக்கி பிடித்த ஆட்டோ ஓட்டுநர்… ஊர்கூடி தர்ம அடி!

0 8132

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பழம்விற்கும் தாய்மார்களை அடித்து விரட்டி அரைமணி  நேரத்துக்கும் மேலாக கையில் இரும்புராடுடன் கடுமையான ரகளையில் ஈடுபட்ட கஞ்சா போதை ஆசாமியை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் துணிச்சலாக மடக்கி பிடித்ததும் ஊர்கூடி அடித்து உதைத்த சம்பவத்தின்  பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது

திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் வெறிபிடித்து சுற்றிய இளைஞன் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளை தாக்கி விரட்டினான். பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட அவனை கண்டு எல்லோரும் அஞ்சி ஒதுங்கி நின்றனர்.

அங்கு கொய்யா பழம் வியாபாரம் செய்த மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து விரட்டிவிட்டு, போலீசார் முன்னிலையிலேயே அவரது பழக்கூடையை கிரிக்கெட் விளையாடுவது போன்று கூடையை அடித்து உடைத்து பழங்களை நாசம் செய்தான்

அந்த நபரை நெருங்க பயந்து தயங்கிக் கொண்டிருந்த நேரம், அங்குள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சாமர்த்தியமாக அவனது பிடரியை பிடித்து தரையில் தள்ளினார். அடுத்த நொடி மக்கள் ஆவேசத்துடன் சுற்றிவளைத்து அந்த நபரை அடித்து உதைத்தனர்

பேருந்து நிலையத்தில் பழங்களை சிதறவிட்டு ஆவேசம் காட்டிய அந்த இளைஞரை பொதுமக்கள் பிதுக்கி எடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த களேபரத்தால் திருவண்ணமலை சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments