சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதம் இல்லா இ.பட்ஜெட் தாக்கல்..!

0 1626

ட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதம் இல்லா இ.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரின் இருக்கைக்கு முன்புள்ள மேஜையில் கணினி திரை வைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பட்ஜெட்டை படித்த போது அந்த வரிகள் அதில் திரையிடப்பட்டது. கணினி திரையின் அருகிலேயே கையடக்க tab ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

அதில், உறுப்பினர்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தி பி.டி.எப்., பைலை ஓபன் செய்து தொடுதிரையின் மூலம் முன்னும் பின்னும் உள்ள பக்கங்களை நகர்த்தி படிக்கலாம்.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை குறிப்பெடுக்கவும் அதில் வசதி செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு உதவ தொழில்நுட்ப நிபுணர்களும் பேரவையில் தயார் நிலையில் இருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments