சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த புகார் ; ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2257
சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்

சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் வரும் 25ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபியாக இருந்த ரூபா தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு பெங்களூரு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் அங்கமாக சசிகலா சிறையில் இருந்தபோது சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய கிருஷ்ணகுமாரின் பெலகாவி வீட்டில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது குறீப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments