மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் காலமானார்..

0 4371
மதுரை ஆதீனமான 292ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் காலமானார். அவருக்கு வயது 77.

மதுரை ஆதீனமான 292ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் காலமானார். அவருக்கு வயது 77.

கடந்த  8ஆம் தேதி இரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தார். 

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் இன்று மதியம் 3 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1500 ஆண்டுகள் பழமைமிக்க மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக சைவ சித்தாந்தத்தை பரப்பும் ஆன்மீகப் பணியில் அருந்தொண்டாற்றியவர் என முதலமைச்சர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

பல்வேறு மக்கள் சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மதுரை ஆதினம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  புகழாரம் சூட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments