பெட்ரோல் பங்க் ஊழியர்களை பட்டாகத்தியால் வெட்டிய வழிப்பறி கும்பல் ; லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

0 2806
லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

சென்னை அருகே லாரி ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற கும்பலை தட்டிக்கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்களை அந்த கும்பல் பட்டாக்கத்தியால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று முன் தினம் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே லாரி ஓட்டுநரிடம் ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட முயன்றுள்ளது. இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவர்களை தட்டிக்கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நேற்றிரவு பெட்ரோல் பங்கிற்கு வந்து பட்டா கத்தியால் ஊழியர்களை தாக்கியது. இது தொடர்பாக எர்ணாவூர் பகுதியில் பதுங்கி இருந்த 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் இந்த கும்பல் இரவு நேரங்களில் கண்டெய்னர் லாரிகளில் வரும் வடமாநிலத்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments