ரூ.15.52 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1673
ரூ.15.52 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். 100 படுக்கைகளுடன் இயங்கி வந்த இந்த மருத்துவமனை, தற்போது 100 ஆக்சிஜன் படுக்கைகள், 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய 300 படுக்கைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமும் விரைவில் திறக்கப்படவுள்ளது. தனியார் நிறுவனங்களின் நிதியுதவியுடன் 15 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments