தமிழ்நாட்டில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடத் திட்டம் குறைப்பு

0 3286

மிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

நேரடி கற்றல் - கற்பித்தல் இல்லாத நிலையில், கற்றல் இடைவெளியைப் போக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் பாடத்திட்டத்தை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை 40 சதவீதம் முதல் 50 சதவீத வரையிலான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

9-ம் வகுப்புக்கு 38%, 10-ம் வகுப்புக்கு 39%, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 35% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையிலேயே ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments