1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள்.. உணவு மானியத்திற்கு ரூ.8437 கோடி..!

0 2060
1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள்.. உணவு மானியத்திற்கு ரூ.8437 கோடி..!

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூபாய் 2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம், சுமார் 8 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடுகள் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூபாய் 18 ஆயிரத்து 933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் முன்மொழிந்த சித்தா பல்கலைக்கழகத்தை உருவாக்க ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் திறன் உள்ள நிலையில், 2 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே வருவதால், மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பட்ஜெட் உரையில் வலியுறுத்தப்பட்டது.

 

10 ஆண்டுகளுக்குள் தமிழகம், முற்றிலும் குடிசைகள் அற்ற மாநிலமாக விளங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஓசூர், கோவை - திருப்பூர் பகுதியில் புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

பயனாளிகளின் தரவுகள் சரியாக இல்லை என்பதால் சமூக நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை என தெரிவித்த நிதியமைச்சர், மாநிலத்தில் உள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார். 

 

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும், கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

 

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறுகள் அறிக்கை தயார் செய்யப்படும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

623 கோடி ரூபாயில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும், சென்னை-கன்னியாகுமரி ஜிஎஸ்டி சாலையை 6 முதல் 8 வழிச்சாலையாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments