நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

0 2791

ரு முறை மட்டுமே பயன்படுத்த தக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பிளேட், கப், ஸ்டிரா போன்ற பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. பாலிதின் பைகளுக்கான தடிமன் அளவும் 50 மைக்ரானில் இருந்து 120 மைக்ரானா அதிகரிக்கப்படுகிறது.

செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் 75 மைக்ரானுக்கு குறைவான பாலிதின் பைகளுக்கும், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் 120 மைக்ரானுக்கு குறைவான பாலிதின் பைகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments