ஆரணி அருகே கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் பலி

0 2005
ஆரணி அருகே கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காரும் லாரியும் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில், காரின் முன்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குடும்பத்தினர், ஆரணி அடுத்த படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்துக்கு தரிசனத்துக்காக மாருதி காரில் சென்றுள்ளனர்.

தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, முனியந்தாங்கல் அருகே காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறிய கார், எதிரே வந்துகொண்டிருந்த சரக்கு லாரியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. கோர விபத்தில் காரில் சென்ற ஒரு வயது ஆண் குழந்தை, 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments