தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2713

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழையும், நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments