பட்ஜெட் உரை துவங்குவதற்கு முன்னதாகவே அதிமுக வெளிநடப்பு

0 2898

வெள்ளை அறிக்கையில் அதிமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைக் கூறியதாக தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓர் அறிக்கையைப் படிக்க முற்பட்டார். அதற்குப் பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதிக்காததால் அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் வெள்ளை அறிக்கை என்பது விளம்பரம் தேடும் முயற்சி எனக் குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுத்தது, நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments