அல்ஜீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

0 1893

அல்ஜீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயால் உயிரிழப்பு எண்ணிக்கை 65-ஐ கடந்தது.

வடக்கு மாகாணமான Kabylie மலைப் பகுதிகளை அழித்த காட்டுத் தீ தற்போது மெல்ல குடியிருப்புகளை சூறையாடி வருகிறது. உயிரிழந்த 65 பேர்களில் 28 பேர் காட்டுத் தீயை அணைக்க சென்ற ராணுவ வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாட்களுக்கு துக்க அனுசரிப்பை அதிபர் Abdelmadjid Tebboune அறிவித்துள்ளார். பிரான்சில் இருந்து 2 ராட்சத தீ அணைக்கும் விமானங்களை அனுப்பி வைப்பதாக பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments