2-வது டெஸ்ட் கிரிக்கெட் - முதல் நாளில் இந்தியா 276 ரன்கள் குவிப்பு

0 4086

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 276 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா 83 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். அடுத்த வந்த புஜாரா 9 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 42 ரன்களிலும் வெளியேறினர்.

மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசி அணியின் ரன் கணக்கை உயர்த்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 127 ரன்களும், ரஹானே 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments