கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க அரசாணை வெளியீடு

0 2423
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிதி

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் 34 பேரின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க 8 கோடியே 50 லட்ச ரூபாயை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த 34 பேரின் பெயர்ப் பட்டியலையும் அரசாணையில் வெளியிட்டுள்ளது. அவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநருக்கு 8 கோடியே 50 லட்ச ரூபாயை விடுவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments