தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு

0 2279
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.

தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு முதலில் தினசரி 5ஆயிரம் ரூபாய் கட்டணம் இருந்த நிலையில், தொகுப்பு கட்டண முறையில் 3ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

தீவிரமில்லாத ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக்கு தினசரி கட்டணம் 15,000 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 7,500 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் 35,000த்திலிருந்து 56,200ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டணம் 30ஆயிரத்தில் இருந்து 27ஆயிரத்து100ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இல்லாதவர்கள், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு செலுத்த வேண்டிய கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments