தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு வலைவீச்சு

0 2061
தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு வலைவீச்சு

சென்னையில் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரவள்ளூரில் இயங்கி வரும் அந்த காப்பகத்தின் நிர்வாகியான இசபெல் ரிச்சர்ட்சன் என்ற பெண்ணின் தம்பி பென்னேட் ரிச்சர்ட்சன் அனுமதியின்றி காப்பகத்தில் தங்கியிருந்ததோடு சிறுமி மற்றும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரவள்ளூர் மகளிர் போலீசார், பாலியல் அத்துமீறல்களுக்கு உடந்தையாக செயல்பட்ட இசபெல் ரிச்சர்ட்சனை கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள அவனது தம்பியை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments