பெண் என்பதால் பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் புறக்கணிப்பதை ஏற்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

0 2107
பெண் என்பதால் பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் புறக்கணிப்பதை ஏற்க முடியாது

தகுதிப் போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் புறக்கணிப்பதை ஏற்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமீஹா பர்வீன் தொடுத்துள்ள வழக்கில், செவித்திறன் குறைபாடுள்ளோருக்கான பன்னாட்டு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கத் தான் தகுதி பெற்றும் பெண் என்பதால் தன்னைப் போலந்துக்கு அழைத்துச் செல்ல விளையாட்டு ஆணையம் மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சமீஹா பர்வீன் தடகளப் போட்டிகளில் இதுவரை பெற்றுள்ள பதக்க விவரங்களை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இது தொடர்பாக நாளைக்குள் இந்திய விளையாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments