தமிழக காவல்துறையை சேர்ந்த 8 ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு விருது

0 5075
தமிழக காவல்துறையை சேர்ந்த 8 ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு விருது

தமிழக காவல் துறையைச் சேர்ந்த 4 பெண் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 ஆய்வாளர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் காவல் துறையில் சிறப்பாக புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி கெளரவித்து வருகிறது. காவல் துறை அதிகாரிகளின் புலனாய்வுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருது, இந்த ஆண்டு நாடு முழுவதும் 152 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர்களான அன்பரசி, கவிதா, கலைச்செல்வி, கண்மணி மற்றும் சிதம்பர முருகேசன், மணிவண்ணன், ஜெயவேல், சரவணன் ஆகிய எட்டு பேரும் சிறந்த புலனாய்வுக்கான விருது பெறுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments