நாட்டின் முதலாவது உபரி நீர் நகரமாக இந்தூர் தேர்வு

0 2167

இந்தியாவின் மிக சுத்தமான நகரம் என்ற பெயரை பெற்றுள்ள இந்தூர், இப்போது நாட்டின் முதலாவது உபரி நீர் நகரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான சுத்தம், சுகாதாரம் மற்றும் தூய்மை நகரங்களுக்கான சர்வேயில் , இந்தூருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்த பெருமையை பெற்றதன் மூலம் மத்திய பிரதேசத்தின் வர்த்தக தலைநகர் என கூறப்படும் இந்தூர், நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக, டுவிட்டரில் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments