இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

0 1876

மாச்சல் பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன 30 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிம்லா-ரெக்காங் பியோ நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், சிம்லாவுக்கு 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்தோ திபெத் காவல்படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மண்ணுக்குள் புதைந்த பேருந்தை மீடக ராணுவம் வரவழைக்கப்படும் என்றும், அதன்பின்னரே உயிரிழப்பு எத்தனை என்பது தெரிய வரும் எனவும் இமாச்சர் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments