தனியாகச் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இருவர் கைது... நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் கைவரிசை காட்டியது அம்பலம்

0 3315

சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வழிப்பறி செய்வதை வாடிக்கையாக்கிய இருவர் போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். 

சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்திற்குள் 24 வயதான இளம் பெண் ஒருவர் பணம் எடுத்துவிட்டு வெளியில் வரும் போது அவரிடம் ஒரு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். அதிர்ச்சியடைந்த அந்த பெண் சுதாரிப்பதற்குள் அவரது கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தயாராக நின்ற மற்றொரு நபருடன் தப்பிச் சென்றுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்த போது தான் அண்ணா நகர் பகுதியில் தனியாக செல்லும் இளம் பெண்களை குறி வைத்து அவர்களிடம் பாலியல் சீண்டலில் இரண்டு நபர்கள் வழிபறி செய்தது தொடர்பான புகார் இருந்தது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளையும் செல்போன் சிக்னல்களையும் வைத்து, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியை சேர்ந்த கவிதாசனையும் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவனையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களில் கவிதாசன், மனைவியைத் தாக்கியதாக கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவன் என்பதும் கடந்த ஓராண்டாக சாலைகளில் தனியாக செல்லும் இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பிவிடுவான் என்பதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் இதுபற்றி புகார் எதுவும் கொடுக்காமல் போனதால், இந்த செயலை தான் தொடர்ந்து வந்துள்ளான். இடையில் கால்வாய் சுத்தம் செய்யும் பணியின் போது பழக்கமான கொளத்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவனை கூட்டாளியாக்கிக் கொண்டு இருவரும் சேர்ந்து இந்த சேட்டையை தொடர்ந்துள்ளனர்.

ஜெஜெ நகர், முகப்பேர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு போன்ற பகுதிகளை மையப்படுத்தி இவர்கள் இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் இது போன்ற தகாத சீண்டலில் ஈடுப்பட்டு அவர்களின் செல்போன் மற்றும் கைப்பையை பறித்து செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம், இந்த கேடிகள் இருவரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments