ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்தினால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

0 9238

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள், ஏற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. 

குறிப்பாக உணவு உண்ணும் இடங்களில் அதிக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்படுவதை  மண்டப உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments