மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட பி.எஸ்.ஜி அணியின் ஜெர்சி ; ரசிகர்கள் ஆரவாரம்

0 3079
மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட பி.எஸ்.ஜி அணியின் ஜெர்சி ; ரசிகர்கள் ஆரவாரம்

பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கிளப்பில் புதிதாக இணைந்துள்ள நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பி.எஸ்.ஜி அணியின் ஜெர்சி வழங்கப்பட்டது.

21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸியின் ஒப்பந்தகாலம் சம்பளப் பிரச்சனையால் நீட்டிக்கப்படாததால் அவர் பி.எஸ்.ஜி அணியில் இணைந்தார்.

அவரது வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் மெஸ்ஸிக்கு தீப்பந்தங்கள் கொளுத்தியும், பிரமாண்ட கொடிகளைஅசைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது பெயரை உரக்க உச்சரித்து ஆரவாரம் செய்த ரசிகர்களை நோக்கி மெஸ்ஸி தனக்கு வழங்கப்பட்ட ஜெர்சியை வீசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments