தமிழகத்தில் மேலும் 1,964 பேருக்கு கொரோனா உறுதி ; 1,917 பேர் டிஸ்சார்ஜ்

0 3118
தமிழகத்தில் மேலும் 1,964 பேருக்கு கொரோனா உறுதி ; 1,917 பேர் டிஸ்சார்ஜ்

மிழகத்தில் மேலும்1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 28 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 382 ஆக உள்ளது.

கொரோனாவிலிருந்து 1,917 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பில் கோவையில் அதிக எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், சென்னை அந்த இடத்திற்கு வந்துள்ளது.

சென்னையில் கடந்த 27-ம் தேதி 139 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 243 ஆக உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 229 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 140 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments