முதல் டெஸ்டில் பந்துவீச அதிக நேரம் எடுத்துகொண்ட இந்தியா, இங்கிலாந்துக்கு அபராதம் விதித்துள்ள ஐ.சி.சி

0 2767
முதல் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் விதித்துள்ள ஐ.சி.சி, இரண்டு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து தலா இரண்டு புள்ளிகளை குறைத்துள்ளது.

நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிரா ஆனது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா நான்கு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச அதிக நேரம் எடுத்துகொண்டதாக நடுவர் Chris Broad புகார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 40 சதவீதம் அபராதம் விதித்துள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து தலா 2 புள்ளிகளை குறைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments