மூன்றே மாதங்களில் காபூலை தாலிபன்கள் கைப்பற்றுவார்கள் என அமெரிக்க ராணுவம் தகவல் - ஜோ பைடன் நிர்வாகம் கவலை

0 3647
எதிர்பார்த்ததையும் விட விரைவாக ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபன்கள் பிடித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.

எதிர்பார்த்ததையும் விட  விரைவாக ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபன்கள் பிடித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.

இன்னும் 3 மாதங்களில் தாலிபன்கள் காபூலை கைப்பற்றுவார்கள் என அமெரிக்க ராணுவம் கூறினாலும், இன்னும் ஒரே மாதத்தில் இது நடந்து விடும் என்ற பலமான கருத்தும் நிலவுகிறது.

ஆப்கனில் கடந்த 6 நாட்களில் எட்டாவது நகரமாக  படாக்ஷானின் தலைநகர் ஃபைசாபாத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.

இதனால், நாட்டின் 65 சதவிகித பரப்பு இப்போது அவர்களின் கையில் உள்ளது. இதனிடையே இந்த மாத இறுதிக்குள் ஆப்கனில் இருந்து முழு படையினரையும் வாபஸ் பெறுவதில் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments